திருமணத்திற்கு பின் நடிகை காஜல் நடித்து முடித்துள்ள முதல் திரைப்படம், எந்த நடிகருடன் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ..
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் நடிகை காஜல் அகர்வாலுக்கும் கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் கடந்த மாதம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் ஹனி மூன் புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலானது. மேலும் தற்போது நடிகை காஜல் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை காஜல், துல்கர் சல்மான், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தான் ஹே சினாமிகா.
மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பண்கள் முடிந்துள்ளதாக நடிகை காஜல் ட்விட்டரில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
It’s been a pleasure working on #HeySinamika ❤️ very rarely do we find a team that share work ethic, equilibrium and passion, alike. Thanks to each and everyone for the beautiful energy and assistance through the making of this film. @brindagopal you’ve created a film that’s next
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) December 28, 2020