கணவருடன் சண்டை.. குழந்தை பிறந்தபின் இப்படியா! நடிகை காஜல் அகர்வால் செய்த விஷயம்
காஜல் அகர்வால்
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் முதன் முதலில் பாலிவுட் மூலமாக தான் நடிகையாக அறிமுகமானார். பின் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக களமிறங்கினார்.
தெலுங்கில் வெளிவந்த மகதீரா திரைப்படம் இவருக்கு தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கி, முன்னணி நாயகி எனும் அந்தஸ்தை பெற்றார்.
இவர் கைவசம் தற்போது தமிழில் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கண்டிப்பாக இப்படம் தமிழ் சினிமாவில் காஜல் அகர்வாலுக்கு கம் பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார் காஜல். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
கணவருடன் சண்டை
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை காஜல் அகர்வாலிடம் 'உங்கள் கணவருடன் சண்டை வந்தால் எப்படி சமாதானம் செய்வீர்கள்' என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு "இன்று காலை கூட நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டோம்.எங்களுக்குள் எப்போது சண்டை வந்தால் என் கணவரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டுவிடுவேன். இப்படி தான் சமாதானம் செய்வேன்" என காஜல் கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
