கண்ணப்பா படத்தில் பார்வதியாக நடிக்க காஜல் அகர்வால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். ஆனால், திருமணத்திற்கு சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் கேமியோ ரோலில் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் கண்ணப்பா. சிவ பெருமானுக்கு கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதைதான் இந்த கண்ணப்பா. இப்படத்தை இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியிருந்தார்.
விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்த இப்படத்தில் பிரபாஸ், அக்ஷய் குமார், சரத்குமார், மோகன் பாபு, மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் பார்வதி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

சம்பளம்
இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக காஜல் அகர்வால் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கண்ணப்பா படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை காஜல் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri