காஜல் அகர்வாலுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்! பிரம்மாண்ட படத்தில் இருந்து நீக்கம்
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்தில் இருந்து அவரது காட்சிகள் திடீரென நீக்கப்பட்டு இருக்கிறது.
ஆச்சார்யா
சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் தானாக வெளியேறிவிட்டார் என முன்பு தகவல் பரவியது, ஆனால் அது உண்மை இல்லை எனவும், அவர் நடித்த காட்சிகள் மிக கூறிவந்த அளவே இருப்பதாக கூறி இயக்குனர் தான் நீக்கி இருக்கிறார்.
'அந்த ரோல் மிகவும் காமெடியானது, அந்த அளவுக்கு சின்ன ரோல் வேண்டாம் என நினைத்தேன்ம் அதை காஜலும் புரிந்துகொண்டார்' என இயக்குனர் கூறி இருக்கிறார்.

அனுஷ்கா நடிக்கிறாரா?
காஜல் நடித்த ஒரு காட்சி கூட படத்தில் வராது, ஆனால் ஒரு பாடல் காட்சி மட்டும் வரும் என தெரிகிறது. மேலும் நடிகை அனுஷ்கா ஷெட்டியும் படத்தில் ஒரு ரோலில் தோன்ற இருக்கிறார் என்கிற செய்தி வேகமாக பரவி வருகிறது.