சல்மான்கான், ராஷ்மிகாவை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த முன்னணி நடிகை! யார் தெரியுமா
ஏ.ஆர்.முருகதாஸ் - சிக்கந்தர்
தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
இவர் கஜினி,துப்பாக்கி, கத்தி,சர்க்கார்,தர்பார் என பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், தெலுங்கு சினிமா என பல மொழிகளிலும் வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில், பாலிவுட்டில் அமீர்கானை வைத்து கஜினி படத்தை ரீமேக் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
[ZC83MP
அதை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி படம் ஒன்றை இயக்கிக்கொண்டு வருகிறார், அந்த படத்திற்கு சிக்கந்தர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது என சில மாதங்களுக்கு முன் சல்மான்கான் அவரது எக்ஸ் தளத்தில் அறிவித்திருந்தார்.
முன்னணி நடிகை
மேலும், சிக்கந்தர் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து தற்போது, இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
