ராமாயணா BTS: மண்டோதரியாக நடித்த நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள்
Kajal Aggarwal Shares BTS from Ramayana: நடிகை காஜல் அகர்வால் மண்டோதரி கதாபாத்திரத்தில் ராமாயணா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ராமாயணா திரைப்படத்தின் நினைவுகளை பகிரும் வகையில், BTS புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராமாயணா
இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி தீபாவளி சிறப்பு திரைப்படமாக வெளியாகியுள்ளது ராமாயணா. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க, உலகளவில் 2 நாட்களில் ரூ. 221 கோடி வசூல் செய்துள்ளது.

மண்டோதரியாக காஜல் அகர்வால்
ராமாயணா திரைப்படத்தில் ராவணனின் மனைவியாக மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர, பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.

ராமாயணா BTS புகைப்படங்கள்
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் ராமாயணா திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கிடைத்த அன்பிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், இப்படத்தின் BTS-ல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri