கார் ஓட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்ட காஜல் அகர்வால் மகன்.. புகைப்படத்தை நீங்களே பாருங்க
காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மிகவும் விமர்சையாக பல கோடி செலவில் இந்த திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து காஜல் விலகப்போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அதன்பின் தனது முடிவை மாற்றிக்கொண்டு வழக்கம் போல் படங்களில் நடிக்க துவங்கினார்.
இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறார். ஹீரோயினாக மட்டுமல்லாமல் சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வருகிறார். ஆம், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் சத்யபாமா எனும் படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த கடந்த 2022ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய மகனுக்கு நீல் என காஜல் பெயர் வைத்துள்ளார். தனது மகனின் புகைப்படத்தை அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் பதிவு செய்வார்.
காஜல் அகர்வால் மகன்
இந்நிலையில், தனது கணவர் மற்றும் மகனுடன் விடுமுறை நாட்களை மகிழ்வித்து வரும் காஜல் அகர்வால் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதில் காஜல் அகர்வாலின் மகன் நீல் கார் ஓட்டுவது போல் கூட அழகிய க்யூட் புகைப்படம் ஒன்று இருக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், காஜல் மகன் நீல்-ஆ இது! நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..



இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
