திருமணத்திற்கு பிறகு நடிகை காஜலின் சினிமா வாழ்க்கை ! அவரே அளித்த விளக்கம்..
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
மேலும் காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது கர்ப்பமாக உள்ள காஜல் அவர் ஒப்பந்தமாகி இருந்த படங்களில் இருந்து விலகி வந்தார். திருமணத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது திருமண வாழ்க்கையால் சினிமா வாழ்க்கை பாதித்துள்ளதா என்பதற்கு காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது "திருமணம் எனது சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. திருமணம் ஆனதும் நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைமை தற்போது இல்லை.
நடிகைகளின் சொந்த வாழ்க்கை முடிவுகள் சினிமாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை ரசிகர்கள் புரிந்துள்ளனர். எனவே சொந்த வாழ்க்கை மாற்றங்கள் பற்றி யோசிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தலாம். திருமணத்துக்கு பிறகு கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறேன்" என கூறியுள்ளார்.