சிறுவயதில் நடிகை காஜல் அகர்வால் எப்படி இருந்துள்ளார் பாருங்க, வெளியான அன்ஸீன் புகைப்படம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை காஜல் அகர்வால், இவர் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார், திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸூம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள காஜல், தற்போது பலரும் பார்த்திராத அவரின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆம், அவரின் செம கியூட்டான சிறுவயது புகைப்படத்தை நீங்களே பாருங்கள்