மும்பையில் முக்கிய இடத்தில் இரண்டு அப்பார்ட்மென்ட் வாங்கிய நடிகை கஜோல்- இத்தனை கோடியா?
பாலிவுட் சினிமாவில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை கஜோல்.
இவரும் நடிகை ஷாருக்கானும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே செம ஹிட், இவர்கள் மிகவும் சூப்பரான ஹிட் ஜோடி என இப்போதும் மக்கள் கூறுவார்கள்.
கடைசியாக இவர்கள் இணைந்து தில்வாலே என்ற படத்தில் நடித்திருந்தார்கள், அதன்பிறகு தனித்தனியாக தான் நடித்து வருகிறார்கள்.
நடிகை கஜோல் படங்கள் நடிப்பதில் ஆக்டீவாக இருக்கிறாரோ இல்லையோ ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஏதாவது பதிவு செய்துகொண்டே இருப்பார்.
தற்போது அவரைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகை கஜோல் மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் இரண்டு அப்பார்ட்மென்ட் வாங்கியுள்ளாராம்.
இரண்டும் சேர்த்து அவர் ரூ. 11.95 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.