கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு இப்படியான பாராட்டை பெற்றது நடிகர் சூர்யா மட்டுமே ! போஸ்டருடன் இதோ
சூர்யா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் நடிகர் சூர்யா, இவர் அடுத்தடுத்த பல முக்கிய இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரிய இருக்கிறார்.
மேலும் சமீபத்தில் சூரரை போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவரின் இத்தனை வருட திரைபயணத்தில் தேசிய விருது பெறுவது இதுவே முதல்முறை.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காக்க காக்க. இப்படம் வெளியாகி இன்றுடன் 19 வருடங்கள் ஆகியுள்ளது.
காக்க காக்க
இதனை கொண்டாடும் வகையில் #19YearsOfKaakhaKaakha ஹாஷ் டேக்கில் அப்படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காக்க காக்க திரைப்படம் குறித்த போஸ்டர் ஒன்றில் “காக்கிச் சட்டைக்கு கலங்கரை விளக்கம் புரட்சிகலைஞரின் ஊமை விழிகள், வல்லரசு கலங்கரை வெளிச்சத்தின் வழியில் சூர்யாவின் காக்க காக்க” என பாரட்டை பெற்றுள்ளது.
அந்த போஸ்டர் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
விரைவில் உருவாகும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம்