நடிகை மீனாவிடம் இரண்டாவது திருமணம் குறித்து பேசினால், அவளது பதில் இதுதான்- கலா மாஸ்டர் சொன்ன விஷயம்
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே படங்கள் நடிக்கும் கலைஞர்கள் சிலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நடித்தார்.
பின் 1990ம் ஆண்டு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.
இப்போதும் படங்களில் பிஸியாக நடித்துவரும் மீனாவிற்கு கடந்த வருடம் ஒரு சோகமான நிகழ்வு நடந்தது. அதாவது அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கலா மாஸ்டர்-மீனா
மீனாவிற்கு அவரது கணவர் இறப்பிற்கு பிறகு மிகவும் ஆதரவாக இருந்தார்.
அண்மையில் ஒரு பேட்டியில் கலா மாஸ்டர் பேசும்போது, நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள், அவளது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்த 3 மாதம் நான் மீனாவுடன் தான் இருந்தேன்.
மீனாவின் கணவர் இறந்த பிறகு, அவளிடம் நான் 'உனக்கு வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும், உனக்கு சின்ன வயசுதான்' என்று சொன்னால், மீனா என்னை திட்டுவாள். உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க, வேண்டாம் அக்கா எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என மீனா கூறிவாள், நானும் அமைதியாகிவிடுவேன் என கலா மாஸ்டர் கூறியுள்ளார்.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri