திடீரென முடிவுக்கு வரும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர்... புதிய தகவல், எந்த டிவி தொடர் தெரியுமா?
சீரியல்கள்
சன் டிவி, விஜய் டிவி தமிழ் சின்னத்திரையில் கடும் போட்டி என்றால் இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கு தான்.
வாரா வாரம் வரும் டிஆர்பி விவரங்களில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் மாறி மாறி வரும்.
தற்போது சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், சுந்தரி, சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
முடியும் தொடர்
ஏற்கெனவே விஜய் மற்றும் சன் டிவியில் டிஆர்பியில் குறைந்துள்ள தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கண்ணெதிரே தோன்றினாள் தொடரும் முடிவுக்கு வர இருக்கிறதாம்.
கடந்த 2022ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் இதுவரை 688 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
தற்போது தொடர் முடிவு செய்தி கேட்ட ரசிகர்கள் இது சரியான முடிவு இல்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
You May Like This Video