களம்காவல் திரை விமர்சனம்
மம்முட்டி ஒரு படம் நடிக்கிறார் என்றாலே கண்டிப்பாக அது திரைப்பட ரசிகர்களுக்கு திரை விருந்தாக இருக்கும். அப்படி ஜெய்லர் புகழ் விநாயகனுடன் ஜிதிஸ் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்துள்ள களம்காவல் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
மம்முட்டி படத்தின் ஆரம்பத்திலேயே தன் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு பெண்ணை பார்க்க செல்கிறார், அவருடன் ஜாலியாக உரையாடிவிட்டு திடிரென கழுத்தை நெரித்து கொல்கிறார்.
என்னடா இது என்று பார்த்தால், இவர் வேலையே இதுதான், தமிழகம், கேரளாவில் உள்ள பல பெண்களை தன் மாய வலையில் விழ வைத்து அவர்களுடன் உல்லாசமாக இருதுவிட்டு கொலை செய்துவிடுகிறார்.
யாராலையும் கண்டுப்பிடிக்க முடியாத இந்த கேஸை விநாயகன் கையில் எடுத்து தொலைந்து போன பெண்கள் வீட்டிற்கு எல்லாம் சென்று விசாரிக்கிறார்.
அப்படி விசாரிக்கையில் ஆல்மோஸ்ட் இன்று பிடித்துவிடலாம் என்று இருக்கையில், இடைவேளையில் ஒரு டுவிஸ்ட் வருகிறது பாருங்க, அப்றம் எப்படி மம்முட்டி பிடிப்பட்டாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
மம்முட்டி இப்படி ஒரு ரோல் எடுத்து நடித்ததற்காகவே எத்தனை பாராட்டுக்களும் தகும், ஒரு வில்லன் நடிகர் கூட இமேஜ் பார்ப்பார் போல, அத்தனை இமேஜையும் தூக்கி எறிந்துவிட்டு, அவர் செய்யும் வேலையை படத்தில் பாருங்கள், நீங்களே அசந்து விடுவீர்கள்.
விநாயகனும் மிடுக்கான போலிஸ் கேரக்டரில் செம ஸ்கோர் செய்கிறார், இந்த கொலைகளை எல்லாம் செய்வது யார் எப்படியாவது புடித்துவிட வேண்டும் என அவர் அலைவது பல இடங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் பதறும் இடம் நமக்கு பதட்டம் வருகிறது.
அதிலும் இடைவேளை மம்முட்டி செய்யும் ஒரு வேளை, இனி என்ன செய்வார் விநாயகம் எப்படி கண்டுப்பிடிப்பார் என்ற பதட்டம் இடைவேளையில் வருகிறது.
ஆனால் இடைவேளை முடிந்து படம் எங்கும் போர் அடிக்கவில்லை என்றாலும், கதை சுற்றி சுற்றி ஒரே இடத்திலே சுத்துவது போல் உள்ளது.
அதிலும் வில்லன் இவர் தான் என தெரிந்த பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் பரபரப்பு குறைகிறது, எப்படியோ கிளைமேக்ஸில் அதை மேட்ச் செய்கின்றனர்.
மம்முட்டி பேமிலி குறித்து இன்னும் தெளிவாக கூறியிருக்கலாம், டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது. அதிலும் படத்தின் இசை பிராமதம்.
க்ளாப்ஸ்
மம்முட்டி அசுர நடிப்பு
விநாயகம் யதார்த்தமான நடிப்பு
படத்தின் முதல் பாதி
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி திரைக்கதை கொஞ்சம் பரபரப்பாகிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த களம்காவல் திரில்லர் ரசிகர்களுக்கு செம விருந்து, மம்முக்கா ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து.