கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
காவ்யா மாறன்
தொழிலதிபரும் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளருமானவர் கலாநிதி மாறன். இவருடைய மகள் தான் காவ்யா மாறன்.
இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக இருந்த விஷயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான். ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
ஐபிஎல் ஏலத்தின் போதும், ஐபிஎல் போட்டியின் போதும் காவ்யா மாறன் கொடுக்கும் க்யூட் ரியாக்ஷன்ஸ் உடனடியாக இணையத்தில் வைரலாகும். ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் கூட இதுகுறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசியிருப்பார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காவ்யா மாறனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 490 கோடிக்கும் மேல் இருக்கும் என்கின்றனர்.
இதன்மூலம் தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை விட இவருடைய சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
