பிரபாஸின் கல்கி 2898 ஏடி 2ம் பாகம் பற்றி வந்த தகவல்.. ரிலீஸ் ஆக இத்தனை வருடங்கள் ஆகுமா?
கல்கி 2898 ஏடி
நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக வலம் வருகிறது.
தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் படங்கள் நடித்தாலும் இடையில் நிறைய படங்கள் ஓடவில்லை, ஆனால் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
பிரபாஸை தாண்டி கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். படம் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
2ம் பாகம்
தற்போது கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2ம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் முதல் பாகத்தில் ஒரு சில நிமிடங்களே வந்த கமல்ஹாசன் கதாபாத்திரம் அடுத்த பாகத்தில் அதிக அளவு இருக்கும் என கூறப்படுகிறது.
2025ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க தொழில்நுட்ப பணிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்து முடிவடைய 3 வருடங்கள் ஆகும் என்கின்றனர். எனவே கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாகம் 2028ம் ஆண்டு தான் வெளியாகுமாம்.
முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் பல மடங்கு ஆச்சரியங்கள் இருக்கும் என தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் கூறியுள்ளார்.

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu
