இரண்டு நாட்களில் கல்கி 2898 AD செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
கல்கி 2898 AD
பிரபாஸ் இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். பாகுபலி படத்திற்கு பின் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இவருடைய நடிப்பில் தற்போது கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகையர் திலகம் எனும் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
வசூல்
அந்த படத்தை தொடர்ந்து தற்போது கல்கி 2898 AD திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆம், முதல் நாளே உலகளவில் ரூ. 191.5 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 275 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 9.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan