குழந்தை பிறந்துவிட்டால், அந்த பிரச்சனைக்காகவே அனுராக் காஷ்யபை விவாகரத்து செய்தேன்... கல்கி கோச்லின் ஓபன் டாக்
அனுராக் காஷ்யப்
பாலிவுட் சினிமாவின் பிரபலமான இயக்குனர் தான் அனுராக் காஷ்யப். நிறைய வெற்றிப் படங்களை கொடுத்த அனுராக் தமிழ் பக்கம் இயக்குனராக அல்லாமல் நடிகராக களமிறங்கியுள்ளார்.
Paanch படத்தின் மூலம் இயக்குனரான அனுராக், அதன்பின் Black Friday, No Smoking, Return Of Hanuman, தேவ் டி உள்ளிட்ட படங்களை இயக்கினார், வெற்றியும் கண்டார்.
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார்.
விவாகரத்து
இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப், நடிகை கல்கி கோச்லின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்து செய்துவிட்டனர்.
இதுகுறித்து கல்கி கோச்லின் ஒரு பேட்டியில் பேசும்போது, எனது பெற்றோர்கள் எப்போதும் சண்டை போடுவார்கள், இதனால் எனது 13 வயதில் இருந்தே எனக்கு மன உளைச்சல் வந்தது. எனது பெற்றோரின் சண்டை, எனது சிறு வயது மன அழுத்தம் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
எனக்கு திருமணமான சில நாட்களிலேயே எனக்கும் அனுராக்குக்கும் சண்டை நாளுக்கு நாள் வலுத்தது.
அப்போது எனது சிறுவயது மன அழுத்த நாட்கள் கண்முன்னே வர எங்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என தோன்றியது, எனவே விவாகரத்து செய்தேன் என கூறியுள்ளார்.