கல்கி படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்
கல்கி
கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளே மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. உலகளவில் ரூ. 191.5 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்தனர்.

இதன்மூலம் முதல் நாளே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் லிஸ்டில் கல்கியும் இணைந்துள்ளது. அதுமட்டுமின்றி பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2, சாஹோ, ஆதி புருஷ், சலார் ஆகிய படங்களும் முதல் நாள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

அதை தொடர்ந்து வெளிவந்த கல்கியும் முதல் நாள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், இந்திய சினிமாவில் முதல் நாளே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஐந்து திரைப்படங்களை கொண்டவர் நடிகர் பிரபாஸ் தான் என சாதனை படைத்துள்ளார்.
வசூல் அறிவிப்பு
முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது இரண்டு நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்கி திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 298.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri