கல்லூரி பட புகழ் நடிகர் வினோத்திற்கு விரைவில் திருமணம்... நிச்சயதார்த்த போட்டோ

By Yathrika Feb 13, 2026 12:35 PM GMT
Report

நடிகர் வினோத்

கடந்த 2007ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான கல்லூரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் வினோத்.

அப்படத்தை தொடர்ந்து தனுஷின் மாரி படத்தில் அடிதாங்கி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

கல்லூரி பட புகழ் நடிகர் வினோத்திற்கு விரைவில் திருமணம்... நிச்சயதார்த்த போட்டோ | Kalloori Movie Actor Vinoth Get Married Soon

அதன்பின் எனக்கு வாய்த்த அடிமைகள், பிச்சுவா கத்தி, ஸ்கெட்சி, ராஜா கங்குஸ்கி, மாரி 2, தெக்கத்தி வீரன், அயோத்தி, பிழை என தொடர்ந்து படங்கள் நடித்த வந்தார். அண்மையில் இவர் கவின், ஆண்ட்ரியா நடித்த மாஸ்க் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

ராம் சரண்-உபாசனா மகன், மகளின் பெயர்கள் என்ன தெரியுமா?... சிரஞ்சீவி அப்டேட்

ராம் சரண்-உபாசனா மகன், மகளின் பெயர்கள் என்ன தெரியுமா?... சிரஞ்சீவி அப்டேட்

திருமணம்

நடிகர் கல்லூரி வினோத்திற்கு நித்யஸ்ரீ என்பவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அந்த போட்டோவை வினோத் தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மாடல் அழகியான நித்யஸ்ரீ 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் தமிழ் மணிலம் 2024 டைட்டிலை வென்றுள்ளார். மேலும் இவர் மேக்கப் கலைஞராகவும் இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US