கல்லூரி பட புகழ் நடிகர் வினோத்திற்கு விரைவில் திருமணம்... நிச்சயதார்த்த போட்டோ
நடிகர் வினோத்
கடந்த 2007ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான கல்லூரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் வினோத்.
அப்படத்தை தொடர்ந்து தனுஷின் மாரி படத்தில் அடிதாங்கி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

அதன்பின் எனக்கு வாய்த்த அடிமைகள், பிச்சுவா கத்தி, ஸ்கெட்சி, ராஜா கங்குஸ்கி, மாரி 2, தெக்கத்தி வீரன், அயோத்தி, பிழை என தொடர்ந்து படங்கள் நடித்த வந்தார். அண்மையில் இவர் கவின், ஆண்ட்ரியா நடித்த மாஸ்க் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
திருமணம்
நடிகர் கல்லூரி வினோத்திற்கு நித்யஸ்ரீ என்பவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
அந்த போட்டோவை வினோத் தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மாடல் அழகியான நித்யஸ்ரீ 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் தமிழ் மணிலம் 2024 டைட்டிலை வென்றுள்ளார். மேலும் இவர் மேக்கப் கலைஞராகவும் இருக்கிறார்.