ரத்தம் குடிக்கும் காட்டேரி, வருங்கால கணவர் பயப்படுவாரா?.. மனம் திறந்த கல்யாணி!
Lokah
டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Lokah.
இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பயப்படுவாரா?
இந்நிலையில், இந்த இளம் வயதில் இப்படி ரத்தம் குடிக்கும் காட்டேரியாகவும், ஆக்ஷன் காட்சிகளிலும் தைரியமாக நடித்துள்ளீர்களே! வருங்காலத்தில் உங்கள் கணவர் பார்த்தால் எப்படி பீல் பண்ணுவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, " இது குறித்து நான் நினைத்து பார்க்கவில்லை. அப்பாவிடம் சொன்ன போது, நீ ஆக்ஷன் காட்சியில் நடிக்க போகிறாயா? கால், கையெல்லாம் ஒழுங்காக பார்த்துக்கொள் என்று மட்டும் சொன்னார். அதை தாண்டி நான் எது குறித்தும் யோசிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.