மாநாடு படத்திற்காக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..!
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் மாநாடு.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், YG. மஹேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
இப்படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரின் நடிப்பை தாண்டி ரசிகர்களால் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.
இவர் மாநாடு படத்திற்கு முன்பு தமிழில் வெளிவந்த ஹீரோ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாநாடு படத்திற்காக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.