ஆலியா பட்-க்கு பதிலாக இவரா? ரன்வீர் சிங் ஜோடியான ரூ. 300 கோடி வசூல் நாயகி.. யார் தெரியுமா?
ரன்வீர் சிங்
சமீபத்தில் வெளிவந்து ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த படம் துரந்தர். ரன்வீர் சிங் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரன்வீர் சிங் அடுத்ததாக 'Pralay' என்கிற சாம்பி படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் ஜெய் மேத்தா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்காக ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்யாணி
வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறாராம். இதன்மூலம் அவருக்கு பாலிவுட் திரையுலகில் பிரம்மாண்ட என்ட்ரி என்று கூறப்படுகிறது.
[TAJX2A ]
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான லோகா படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.