விக்ரம் படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர் ! வாழ்த்து தெரிவித்த கமல்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.
இப்படத்தில் கமலுடன் முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது.
மேலும் அண்மையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிக்க போவதாக தகவல் வெளியாகி பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் பிரபல நடிகரான நரேன் தற்போது விக்ரம் படத்தில் கமலுடன் நடிக்கவுள்ளது குறித்து பதிவு ஒன்றை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதனை ரீ-ட்வீட் செய்துள்ள கமல் அவரை விக்ரம் படத்திற்கு வரவேற்று பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அவரை வரவேற்று பதிவிட்டுள்ளார்.
It's been long overdue. Welcome on board @itsNarain.@Dir_Lokesh@RKFI #Vikram https://t.co/5kIp3gmV8p
— Kamal Haasan (@ikamalhaasan) August 24, 2021
Bigg Boss: ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை... சுயரூபத்தை காட்ட ஆரம்பித்த போட்டியாளர்கள் Manithan