சென்னையில் உள்ள முக்கிய இடத்தில் தனது வீட்டை மாற்றிய கமல் ! எங்கு தெரியுமா?
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வருகின்றனர்.
மேலும் கமல் கடந்த சில ஆண்டுகளாக சாந்தோம் அருகில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார் என்பதும், அங்கு அவருக்கென தனி சமையல் கலைஞர் மற்றும் ஜிம் ஆகியவை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த மாதம் கமல் சென்னையில் உள்ள முக்கிய பகுதியான போட் கிளப் ரோடு பகுதிக்கு தனது வீட்டை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில் பிரபல தொழில் அதிபர்களான கலாநிதி மாறன், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஸ்ரீனிவாசன், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட பல தொழிலதிபர்களின் இல்லங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu