புலம்பிய கமல்ஹாசன்.. வனிதா செய்த செயல் அப்படி! லேட்டஸ்ட் ப்ரோமோ
வனிதா விஜயகுமாரை தான் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வாரம் கேப்டன் என்கிற பெயரில் அவர் எல்லைமீறி சென்றதால் இப்படி நடக்கிறது.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கும் கமல் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கிறார். யார் மற்றவர்களை பேச விடாமல் செய்தது என சொல்லி, அவர் வாயில் குழந்தைகளுக்கு வைக்கும் ரப்பர் வைத்துவிட வேண்டும் என கமல் கூறினார்.
அதிகம் பேர் வனிதாவுக்கு தான் அதை கொடுத்தனர். அதன் பின் இறுதியில் வனிதா அந்த கேள்விக்கு பதில் சொல்ல கமல் கேட்க அவர் மறுக்கிறார். நான் டாஸ்க் கொடுத்தாலும் செய்ய மாட்டிங்களா என கமல் புலம்புகிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் டாஸ்க்குள் சரியாக செய்யாமல் வனிதா ஒதுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day21 #Promo3 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/fs1ZzNIoaw
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 20, 2022