மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்ற கமல்!

Bigg Boss Vikram Kamal Puneeth Rajkumar Ulaganayagan
By Jeeva Dec 30, 2021 09:20 AM GMT
Report

உலகநாயகன் கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார்.

கமலுக்கு சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது, தற்போது மீண்டும் கமல் இணைந்துள்ளதால் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கமல் விக்ரம் படக்குழுவுடன் பெங்களூரு சென்றுள்ளார், அங்கு சென்ற கமல் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கமல் அவரின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் உடன் சென்று அவர்களை சந்தித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராகவும் லட்சக்கணக்கான ரசிகர்களால் அப்பு எனவும் கொண்டப்பட்ட புனீத் ராஜ்குமாரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US