முதல் வாரத்திலேயே ஆரம்பிச்சிட்டாங்க.. இது புதுசா இருக்கு! பிக் பாஸ் அல்டிமேட் ப்ரோமோ
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ வழக்கமான பிக் பாஸ் ஷோவை விட மிகவும் பரபரப்பாக இருந்துவருகிறது. முதல் நாளில் இருந்தே வீட்டில் சண்டை சச்சரவு என அனைத்தும் வருவது தான் காரணம்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கமல் ஷோவுக்கு வரப்போகிறார். அவர் பேசி இருப்பது இன்றைய முதல் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
"புது வேகத்துடன் என சொன்னேன், ஆனால் முழு வேகத்துடன் முதல் வாரத்திலேயே ஆரம்பிச்சிட்டாங்க. காலை எழுந்தவுடன் காபி என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதிலும் கலகம் என்பது புதுசா இருக்கு."
"வீட்டுக்குள் இருப்பவர்கள் முதல் வாரம் அதனால் எலிமினேஷன் இருக்காது என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியா?" என கூறிவிட்டு கமல் சிரிக்கிறார். அதனால் இந்த வாரமே நிச்சயம் எலிமினேஷன் இருக்கும் என தெரிகிறது.
ப்ரோமோ இதோ..
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day7 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/TSi7lDROFN
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 6, 2022