வனிதாவை எச்சரித்த கமல்.. BB அல்டிமேட் லேட்டஸ்ட் ப்ரோமோ
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தொடங்கி ஒரு வாரம் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் போட்டியாளர்கள் நடுவில் பல்வேறு பிரச்சனைகள், சண்டைகள் என நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வனிதா காபி தூள் வேண்டும் என கேட்டு ரகளை செய்தது மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. டீ தூளை எடுத்து ஒளித்துவைத்துக்கொண்டது தான் கோபத்திற்கு காரணம்.
அதன் பின் காபி தூள் வந்தபோதும் அதை வனிதா எடுத்து வைத்துக்கொண்டதும் சண்டைக்கு காரணமானது. அது பற்றி இன்று கமல் பேசி இருக்கிறார்.
வனிதா தவிர வேறு யாரவது அதை செய்திருந்தால் மற்றவர்கள் ரியாக்ஷன் இப்படியா இருந்திருக்கும் என கமல் கேட்க, வனிதா என்றால் பயம் என சினேகன் போட்டு உடைக்கிறார். அதன் பிறகு வனிதாவை கமல் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
ப்ரொமோ இதோ
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day7 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/5JA4iCuUPZ
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 6, 2022