சிகரெட் பழக்கத்தை விட்டது எப்படி, கமல்ஹாசனே ஒரு பேட்டியில் கூறிய விஷயம்- இதோ

actor kamalhaasan cigarette
By Yathrika Dec 30, 2021 10:50 AM GMT
Report

சினிமாவில் இருக்கும் கலைஞர்கள் ஒரு துறையில் மட்டும் பயணிப்பது இல்லை. நடிகர்கள் பாடகர்கள், தயாரிப்பாளர் ஆவதும் இசையமைப்பாளர்கள் ஹீரோவாவதும் நிறைய நடந்து வருகிறது.

ஆனால் 80, 90களிலேயே நடிப்பு என்று இல்லாமல் பல விஷயங்களை தனது கவனத்தை செலுத்தி அதிலும் சாதனை படைத்தவர் தான் கமல்ஹாசன்.

விஜய் சேதுபதி கூட ஒரு நிகழ்ச்சி மேடையில் கமல்ஹாசன் அவர்கள் படங்கள் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளார். புதுபுது விஷயங்கள் இருக்கும், ரசிகர்களை முட்டாளாக்காமல் சிந்திக்க வைத்தவர் என்றிருப்பார்.

இப்படி பல திறமைகளை கொண்ட கமல்ஹாசனுக்கு அந்த காலகட்டத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகம் இருந்துள்ளது, அதை எப்படி நிறுத்தினேன் என ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

ஒரு நாள் படப்பிடிப்பில் சிகரெட் பிடிக்கும் போது அங்கிருந்த லைட் மேன் என் சிகரெட்டை பிடுங்கி அடி போடுவேன், இப்போது தான் உன்னை குழந்தையாக பார்த்தது போல் உள்ளது.

இந்த வயதில் உனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமா என திட்டினார். அதன்பிறகு எங்குமே பிடிக்க முடியாது, சினிமாவில் எல்லோர் முன்பும் வளர்ந்ததால் எங்கேயும் பிடிக்க முடியாது.

கழிப்பறையில் பிடிக்கலாம் என்று நினைத்தால் அங்கே போய் பிடிப்பதா என்று சிகரெட் பிடிப்பதையே நிறுத்திவிட்டேன் என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US