இயக்கத்தின் இயக்குனர் - கமல் ஹாசன்

kamal haasan vishwaroopam hey ram virumandi directional chachi420 vishwaroopam 2
By Kathick Mar 16, 2022 11:30 AM GMT
Report

கமல் ஹாசன் என்று சொன்னால் நமக்கு முதலில் நியாபகம் வருவது, முதலில் நடிகர் என்று தான். ஆனால், ஹாலிவுட் திரையுலகே, இந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு சிறந்த படைப்புகளை இயக்கியுள்ளார், இயக்குனர் கமல் ஹாசன். அப்படி அவருடைய படைப்புகள் குறித்து கூறும் சிறு குறிப்பே இந்த கட்டுரை.

படைப்பு எண் 1 : Chachi420

இயக்கத்தின் இயக்குனர் - கமல் ஹாசன் | Kamal Haasan Directed Movies In Tamil

1996ல் தமிழில் வெளிவந்த திரைப்படம் அவ்வைசண்முகி. இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து, Chachi420 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் நடிகர் கமல் ஹாசன். இதுவரை இந்திய சினிமாவில் எந்த ஒரு திரையுலகமும் பயன்படுத்தாத ப்ராஸ்த்தட்டிக் மேக்கப்பை பயன்படுத்தினார். ஷங்கரின் இந்தியன் படத்திற்கு பிறகு ப்ராஸ்த்தட்டிக் மேக்கப் பயன்படுத்தப்பட்ட படமும் இதுவே ஆகும். ரீமேக் படமாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சம் தனது பாணியில் இயக்கி இப்படத்தை வெளியிட்டு, பாலிவுட் திரையுலகில் பாராட்டையும் பெற்றார் கமல்.

படைப்பு எண் 2 : ஹே ராம்

இயக்கத்தின் இயக்குனர் - கமல் ஹாசன் | Kamal Haasan Directed Movies In Tamil

கடந்த 2000ஆம் ஆண்டு 18ஆம் தேதி பிப்ரவரி மாதம் கமல் ஹாசன் இயக்கத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான படம் ஹே ராம். இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து, ஷாருக் கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், ஹேம மாலினி, கிரீஷ் கர்னாட், நசிருதீன் ஷா, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்தார். இப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொண்டது.

ஹே ராம் படத்தின் மூலம் Partition Vs Religion எனும் முறையை திறமையாக இயக்குனர் கமல் ஹாசன் கையாண்டு இருப்பார். படத்தில் கூறப்படும் ஒவ்வொரு வசனமும்.. ஒவ்வொரு காட்சியும் பல இந்திய சரித்திர நிகழ்வுகளை நமக்கு உணர்த்தும். அதிலும், சாகேத் ராம் சாகும் தருவாயில் "இன்னுமா ஹிந்து, முஸ்லீம் கலவரம் நடக்கிறது" என்று கூறுவது.. ஹே ராம் படத்தின் மிகவும் உணர்வுபூர்வமான வசமாக அமைந்துள்ளது.

2000ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம், பெரிதளவில் பேசப்படவில்லை, நல் வழியில்.. ஆனால், தற்போது இயக்குனராக நினையும் ஒவ்வொரு இயக்குனரும் சினிமா என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், பண்ணவேண்டிய முதல் விஷயம், ஹே ராம் படம் பார்பதுமட்டுமே என்று சொல்லக்கூடிய அளவிற்கு இப்படம், கொண்டாடப்படுகிறது.

படைப்பு எண் 3 : விருமாண்டி

இயக்கத்தின் இயக்குனர் - கமல் ஹாசன் | Kamal Haasan Directed Movies In Tamil

கமல் ஹாசன் தயாரித்து, இயக்கிய படம் சண்டியர்.. Sorry, விருமாண்டி.. நெப்போலியன், பசுபதி, எஸ்.என். லட்சுமி, அபிராமி, ரோகினி, ஷண்முகம் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிராமத்து பின்னணியில் உருவான இப்படம் முதல் முறையாக வித்தியாசனமாக திரைக்கதையில் அமைந்திருந்தது. 

ஆம், இந்திய சினிமாவில் முதல் முறையாக ரஷோமோன் Effect பயன்படுத்தி உருவான திரைப்படம் விருமாண்டி. வில்லன் பசுபதி பார்வையில் ஒரு கதையும். கதாநாயகன் கமல் ஹாசன் பார்வையில் மற்றொரு கதையும் நகர்வேதே, ரஷோமோன் Effect. இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்திருப்பார் கமல். ஆம், அன்னலஷ்மியின் பேச்சை மட்டும் தான், அவள் வழக்கும் காளை கேட்க்கும். அதே போல், அந்த ஊரில் அடங்கா காளையாக திரிந்து வரும் விருமாண்டி, அன்னலஷ்மியின் பேச்சை மட்டும் கட்டுப்படுவார். இதன்முலம், விருமாண்டியின் கதாபாத்திர வடிவமைப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இப்போது வேண்டுமென்றால், Nonlinear Narrative படங்கள் பலது வருகின்றன. ஆனால், 2004ஆம் ஆண்டு கிராமத்து கதைக்களத்தில் Nonlinear narrative படத்தை இயக்கி, தமிழக அரசிடம் இருந்து வந்த பல பிரச்சனைகளையும் சமாளித்து, விருமாண்டி படத்தை கமல் ஹாசன் வெளியிட்டு, வெற்றிபெற்று காட்டினார்.

படைப்பு எண் 4 : விஸ்வரூபம்

இயக்கத்தின் இயக்குனர் - கமல் ஹாசன் | Kamal Haasan Directed Movies In Tamil

விஸ்வரூபம் நினைவுக்கு வந்தால், அப்படம் பட்ட பல கஷ்டங்களும் நம் நினைவுக்கு கண்டிப்பாக வரும். விஸ்வரூபம் படத்திற்கு அரசிடம் இருந்து பல பிரச்சனைகள் வந்தது. படத்தை வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது. இந்த ஒரு படத்திற்காக கமல் ஹாசன் தனது வீட்டை விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார். ஏன், சிலர் கமல் ஹாசனுக்கு கொடுத்த கொடச்சலின் காரணமாக 'நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறேன்' என்றும் கமல் ஹாசன் கூறினார்.  

அணைத்து தடைகளையும் மீறி, விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்தது. வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் முதல் முறையாக AURO 3D 37.1 SOUND டெக்னலாஜி பயன்படுத்தப்பட்ட படமும் விஸ்வரூபம் ஆகும். இப்படத்தில் இஸ்லாமியராக நடித்திருக்கும் கமல் ஹாசன், உலக நாடுகளின் பல அரசியல் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும், தீவீரவாதத்தையும் அழகாக எடுத்து காட்டினார்.

படைப்பு எண் 5 : விஸ்வரூபம் 2

 இயக்கத்தின் இயக்குனர் - கமல் ஹாசன் | Kamal Haasan Directed Movies In Tamil

முதல் பாகத்தில் விட்டு சென்ற தனது கடமையை இரண்டாம் பாகத்தில் நிறைவேற்ற விசாம் அஹ்மத் காஷ்மீரி மீண்டும் வந்த படம் விஸ்வரூபம் 2. முதல் பாகத்தை போல், விஸ்வரூபம் 2 படத்திற்கும் பல அரசியல் புள்ளிகளிடம் இருந்து கமல் ஹாசனுக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த முறையும் அணைத்து எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்து படத்தை வெளியிட்டார் இயக்குனர் கமல் ஹாசன்.

உலக நாடுகளின் அரசியலை, தெளிவாக இப்படத்தில் கூறியுள்ள கமல், குறியீடுடன் பல காட்சிகளையும், வசங்களையும் வைத்திருந்தார். அதேபோல், 'எந்த மாதத்தையும் சார்ந்து இருக்கிறது தப்பில்லை. தேச துரோகியாக இருப்பது தான் தவறு' என்று விசாம் அஹ்மத் காஷ்மீரி கூறும் வசனம் எத்தனை அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

மேலும், 'அரசியல் வாதிகள் அனைவரும், நேர்மையாக சமரசம் பேசினால் போதும், தீவிரவாதம் ஒடிங்கிடும்' என்று விசாம் அஹ்மத் காஷ்மீரி உணர்வுபூர்வமாக கூறுவது, உலக நாடுகளில் இருக்கும் அணைத்து தலைவர்களுக்கும் பொருத்தும். இப்படி படம்முழுக்க பல உலக நிகழ்வுகளின் முக்கிய, வேண்டிய விஷயங்களை குறியீடுகளாக வைத்திருக்கிறார் கமல் ஹாசன்.

கமல் ஹாசன் இயக்கிய அணைத்து படங்களையும் கூறிவிட்டு, இந்த படத்தை கூறாமல் செல்ல யாராலும் முடியாது.

படைப்பு எண் : மருதநாயகம் { காத்திருப்போம் }  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US