கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தில் புது பதவி! விஷால் டீம் அதிரடி
சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் விஷால் - நாசர் - கார்த்தி ஆகியோரின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
சங்க கட்டிடம்
தற்போது பதவி ஏற்றிருக்கும் பாண்டவர் அணி முதல் வேலையாக நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இருப்பதாக கூறி இருக்கின்றனர். அதற்காக 21 கோடி ருபாய் இன்னும் தேவைப்படும் என்றும் கூறி இருக்கின்றனர்.
மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என இருக்கும் பெயரை விரைவில் மாற்றி தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றப்படும் என்றும் கூறி இருக்கின்றனர்.

கமலுக்கு பதவி
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சங்கத்தில் ஒரு முக்கிய பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. கமல் நடிகர் சங்க அறங்காவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பூச்சி முருகன், சச்சு, நாசர், விஷால், கார்த்தி உட்பட மேலும் பலரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.