உலகை உலுக்கிய சம்பவத்தை அன்றே கண்முன் நிறுத்திய கமல் ஹாசன்.. ஆடிப்போன ரசிகர்கள்
ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும் பல விஷயங்களை படங்களில் செய்து சாதனை படைத்துள்ளார் கமல் ஹாசன்.
அப்படி கமல் ஹாசன் இயக்கத்தில் வெளியான படங்களில் ஒன்று தான் விஸ்வரூபம் 1,2.
கமல் ஹாசன் இயக்கி, நடித்து உருவான இப்படத்தின் முதல் பாகம் 2013 மற்றும் இரண்டாம் பாகம் 2018-லும் வெளியானது.
கடந்த 4 நாட்களாக, ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய சம்பவம் தான், திருப்பும் இடமெல்லாம் பேசக்கூடிய ஒரே விஷயமாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த தீவிரவாத செயலை விஸ்வரூபம் படத்திலேயே மிகவும் தெளிவாக காட்டியிருப்பார் கமல் ஹாசன்.
உலகை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தை அன்றே கண்முன் நிறுத்திய கமல் ஹாசன் என்று, இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.