பிக்பாஸ் 5வது சீசனில் கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா?- புதிதாக வந்த சம்பள விவரம்
விஜய் தொலைக்காட்சியிலேயே மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். ஆரம்பிக்கப்பட்டபோது பெரிய சர்ச்சைகள் எல்லாம் எழும்பியது, ஆனால் அடுத்தடுத்த சீசன்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
கடந்த வருடம் 4வது சீசன் மிகவும் தாமதமாக தான் தொடங்கியது, காரணம் கொரோனா தாக்கம் தான்.
இந்த 5வது சீசனும் போன முறை போல் தாமதமாக தான் தொடங்கும் என கூறப்படுகிறது.
கொரோனா பிரச்சனைகள் கட்டுக்குள் வந்ததும் 5வது சீசனை மக்கள் எதிர்ப்பார்க்கலாம்.
இந்நிலையில் தான் பிக்பாஸ் 5வது சீசனிற்காக கமல்ஹாசன் பெறப்போகும் சம்பளம் பற்றிய புதிய விவரம் ஒன்று வெளியாகியுள்ளது, ஆனால் இது எந் அளவிற்கு உண்மை தகவல் என்பது தெரியவில்லை.
பிக்பாஸ் 5வது சீசனிற்காக கமல்ஹாசனுக்கு மொத்தமாக ரூ. 50 கோடி சம்பளம் என கூறப்படுகிறது.