ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் கலந்துரையாடிய நடிகர் கமல் ஹாசன்
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23ஆம்தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுடன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காணொலி வாயிலாக கலந்துரையாடி உள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: " டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகை சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும் " என கமல் ஹாசன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும். pic.twitter.com/UOjIHvetEn
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2021

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
