உலகநாயகன் கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் நடந்த மாபெரும் சாதனை.. ஆல் டைம் ரெகார்ட்
கமலின் விக்ரம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கு புதுமையான விஷயத்தை செய்து ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியவர் உலகநாயகன் கமல் ஹாசன்.
இவர் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஆல் டைம் ரெகார்ட்
இந்நிலையில், உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் தான், கமலின் திரை வாழ்க்கையில் தமிழகத்தில் அதிக வசூல் செய்துள்ள திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம், இதற்குமுன் இருந்த தன்னுடைய அனைத்து படங்களின் சாதனையை விக்ரம் முறியடித்து, ஆல் டைம் ரெகார்ட் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.