'அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர்' - மக்கள் செல்வனுக்கு வாழ்த்து சொன்ன உலகநாயகன்..
தமிழ் திரையுலகில் மக்கள் செல்வன் என்ற ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள்.
திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதிக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது உலகநாயகன் நடிகர் கமல் ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் " சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலை கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் " என கூறியுள்ளார்.
கமல் ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @VijaySethuOffl . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/gSpnjtnHYM
— Kamal Haasan (@ikamalhaasan) January 16, 2022