ஹாலிவுட் படத்தில் வேலை செய்துள்ள கமல் ஹாசன்.. ஆனால், நடிகராக இல்லையாம்

hollywood kamal haasan vikram makeup artist rambo 3
By Kathick Dec 23, 2021 04:20 PM GMT
Report

உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

கமல் ஹாசன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், கதை திரைக்கதை, ஒளிப்பதிவு போன்ற பல திரையுலக விஷயங்களை கையாள கூடியவர்.

அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் மேக்கப் ஆர்டிஸ்டாகவும் வேலை செய்துள்ளாராம். அதுவும் ஆஸ்கர் விருது வென்ற மைக்கேல் ஓரிடம் ஒப்பனை சம்பந்தப்பட்ட கலையை கற்று கொள்வதற்காக 40 நாட்கள் பயிற்சி பெற்றுள்ளாராம்.

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஸ்டார் ட்ரெக் மற்றும் ராம்போ 3 ஆகிய இரண்டு திரைப்படங்களில் கமல் ஹாசன் மேக்கப் ஆர்டிஸ்டாக வேலை செய்துள்ளாராம்.

இதுமட்மின்றி தமிழில் அவருடைய நடிப்பில் வெளிவந்த தூங்காவனம் திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஒருநாள் மேக்கப் கலைஞராக கமல் ஹாசன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US