மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் கமல் ! யார் யாருடன் பாருங்க..

Kamal mohan lal mammooty lijo jose pelisery
By Jeeva Jan 13, 2022 02:50 PM GMT
Report

கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலும் நடித்து வருகின்றனர்.

இதனிடையே இப்படத்திற்கு பின் கமல் எந்த இயக்குனருடன் இணைந்து பணிபுரிவார் என்பது குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் கமல் மலையாளத்தில் ஹிட்டான மாலிக் பட இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிப்பார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது மலையாள ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் கமல் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

ஆம் இயக்குனர் Lijo Jose Pellissery இயக்கத்தில் உருவாகும் அந்தோலஜி படத்தில் கமல் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் மம்மூட்டி, மோகன்லால், பகத் பாசில், ஆசிப் அலி உள்ளிட்டோருடன் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US