மீண்டும் மருதநாயகம்.. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யும் கமல்
நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
மேலும் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படமும் கிடப்பில் இருக்கிறது.
இந்நிலையில் கமல் தனது கனவு படமான மருதநாயகத்தை கையில் எடுக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த கதையில் கமல் நடிக்கவில்லை, வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுக்க கமல் பரிசீலனையில் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
தயாரிப்புக்காக ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துடன் கமல் பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என்றும் தெரிகிறது.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
