கமலின் வேற லெவல் லைன் அப் ! பா.ரஞ்சித், வெற்றிமாறன் என முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பதால் பெரியளவில் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் கிளன்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கமல் தற்போது திரைப்படங்களில் நடிக்க முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
அதன்படி முக்கிய இயக்குனரான லோகேஷ் கனகராஜை தொடர்ந்து கமல் இயக்குனர் பா.ரஞ்சித் உடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தை தொடர்ந்து மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் கமல் நடிக்கவுள்ளார். அதன்பின் ரஞ்சித் பின்னர் இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.