உலகநாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா...வெளிவந்த தகவல்!
இந்திய அளவில் தன் நடிப்பால் அனைவராலும் அறியப்படுபவர் உலகநாயகன் கமல் ஹாசன்.
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் இவருக்கு கோலிவுட்டை கடந்து பாலிவுட் வரை ரசிகர்கள் ஏராளம்.
இதுவரை பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான விஸ்வரூபம் 2 படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல்.
சமீபத்தில் விக்ரம் படத்தின் glance வெளியிடப்பட்டு படத்தின்மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை தவிர்த்து இந்தியன்2, இயக்குனர் வெற்றிமாறனுடன் ஒரு படம், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் அடுத்தடுத்து படங்களுடன் பிஸியாக இருக்கும் உலகநாயகனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதன்படி கமலின் மொத்த சொத்து மதிப்பு 176.93 கோடி என கூறப்படுகிறது.