பிரதீப் பேச வாய்ப்பு தரவில்லையா.. ட்ரோல்களுக்கு நேரில் பதிலடி கொடுத்த கமல்ஹாசன்
நடிகர் கமல் பிக் பாஸ் ஷோ மூலமாக தற்போது பெரிய சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். கடந்த வாரம் பிரதீப் ஆன்டனி என்ற போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து கமல் வெளியேற்றினார்.
அதனால் அவரை அதிகம் பேர் ட்ரோல் செய்தனர். கமல் செய்த தவறை சுட்டிக்காட்டி ட்ரோல் செய்து வருகின்றனர்.
பேச வாய்ப்பு தரலியா?
பிரதீப் அவர் தரப்பு நியாயத்தை கூற வாய்ப்பு தரவில்லை என வைக்கப்படும் விமர்சனத்திற்கு கமல் தற்போது பதில் கொடுத்து இருக்கிறார்.
வாய்ப்பு தரும்போதெல்லாம் தான் செய்த தவறுகளை நியப்படுத்துவதும், என்னை விட அவங்க பெரிய தப்பு பண்ணி இருக்காங்க என அவர் கூறிக்கொண்டிருந்தார். அதனால் தான் சொன்னது போதும் என நிறுத்தினேன்.
அதுவும் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு தான் என கமல் கூறி ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.