தோத்துடுவோம்னு பயமா.. போட்டியாளர்களை விளாசிய கமல்! BB Ultimate புது ப்ரொமோ
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன்பே பரிட்சயமான போட்டியாளர்கள் தான் என்றாலும் இந்த முறை பிபி அல்டிமேட் ஷோவில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லை என்ற கருத்து தான் நிலவுகிறது.
இந்த வாரம் வழங்கப்பட்ட போலீஸ் திருடன் விளையாட்டில் போட்டியாளர்கள் பலரும் விளையாடாமல் இருந்தனர். அதிலும் வனிதா படுத்து தூங்கிக்கொண்டிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இன்று பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு வந்திருக்கும் கமல் ஹாசன் இது பற்றி விளாசி இருக்கிறார். "ஒரு விளையாட்டை விளையாட சொன்னால் விதியை மீறி விளையாடுகிறார்கள். இல்லை விளையாடாமல் சும்மா உட்கார்ந்துவிடுகிறார்கள். விளையாடினால் தோற்றுவிடுவோம் என்கிற பயமா. இவர்களை பார்த்தால் விதியை நம்பாதவர்கள் மாதிரியும் தெரியல. இவர்களுடைய பயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருதோ" என கமல் கேட்டிருக்கிறார்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day14 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/lxH4y5KfGb
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 13, 2022