திடீரென வெளியேறும் கமல்? பிக் பாஸ் அல்டிமேட் அடுத்த வார தொகுப்பாளர் யார்
நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில் OTTயில் 24 நேரமும் ஒளிபரப்பும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கப்பட்டது. அதையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஷோவில் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என பிக் பாஸே தெரிவித்து வருகிறார். நெட்டிசன்களும் அதே கருத்தை தான் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கமல் இந்த வாரத்துடன் BB அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் பரவி வரகிறது. இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
கமல் வெளியேறுவது உண்மை என்றால் அடுத்த வாரத்தில் இருந்து தொகுப்பாளர் யாராக இருக்கும் எனவும் விவாதம் நடந்து வருகிறது. பிக் பாஸ் 5ல் சில எபிசோடுகள் மட்டும் வந்த ரம்யா கிருஷ்ணன் அல்டிமேட் ஷோவுக்கும் வருவாரோ என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.