சிறுவயதில் தரையில் அமர்ந்து சாப்பிடும் கமல் - இதுவரை பலரும் பார்த்திராத அரிதான புகைப்படம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பதால் பெரியளவில் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் டீசர் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அரசியல், திரைப்படம், பிக்பாஸ் என பிஸியாக கமல் இருந்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் இவரின் எந்தஒரு அரிதான புகைப்படம் இணையத்தில் வெளியானாலும் அது ரசிகர்களிடையே வைரலாகிவிடும்.
அந்த வகையில் தற்போது கமல் சிறுவயதில் தரையில் அமர்ந்து சாப்பிடும் அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
