முக்கிய நபர் கைது! கமல் ஹாசன் கொந்தளிப்பு! கடும் எதிர்ப்பு!

Kamal Hassan Activist Disha Ravi's Arrest condemn
By Balakumar Feb 16, 2021 10:33 PM GMT
Report

நடிகர் கமல் ஹாசன் தற்போது தேர்தல் பணிகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். மாற்றம் வேண்டும் என அவர் அரசியலில் இறங்கி கடந்த முறை தேர்தலிலேயே அதிகமான ஓட்டுகளை பெற்றதை தொடர்ந்து இம்முறை தமிழக சட்டப்பேரவை முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்ந்து மக்களை சந்தித்து வரும் அவர் தேர்தலுக்கு பின்பே இந்தியன் 2 , லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் இணைவார் என தெரிகிறது.

பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வரும் அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து டூல்கிட்டை பகிர்ந்த திஷா ரவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்.

பொதுநலனுக்காகப் போராடும்போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும்.

மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US