இயக்குனர் சேதுமாதவன் மறைவுக்கு கமல் உருக்கமான இரங்கல்! நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியர்..

Death Kamalhaasan K. S. Sethumadhavan
By Parthiban.A Dec 24, 2021 06:50 AM GMT
Report

பிரபல மலையாள இயக்குனரும் 10 தேசிய விருதுகள் வென்றவருமான இயக்குனர் சேதுமாதவன் இன்று காலமானார். அவருக்கு வயது 90. வயது மூப்பு காரணமாக அவர் இன்று அவரது வீட்டில் காலமானார்.

சேதுமாதவனுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அவர் தான் மலையாளத்தில் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக நடிக்கவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழில் எம்ஜிஆரின் நாளை நமதே, கமலின் நம்மவர் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.

சிவகுமார் நடிப்பில் அவர் இயக்கிய நம்மவர் படத்திற்காக சிறந்த இயக்குநருக்காக தேசிய விருது வென்றார் சேதுமாதவன்.

அவரது மறைவுக்கு கமல் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். "காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்" என அவர் கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US