அப்படியே வெளியே போங்க.. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய கமல்
பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் படுமோசமான விஷயங்களை செய்கிறார், தகாத வார்த்தைகள் பேசுகிறார் என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருக்கிறது.
இன்று கமல்ஹாசன் ஷோவை தொடங்கிய உடனேயே பல போட்டியாளர்கள் கையில் சிவப்பு துணியை கட்டி தங்களுக்கு பிரதீப் ஏற்படுத்தும் சிக்கல்கள் பற்றி வரிசையாக கூறினார்கள். அவர் சொன்ன கெட்ட வார்த்தைகள், பெண்களை பார்த்து சொல்லும் தகாத கமெண்டுகள் என பல விஷயங்களை கமலிடம் கூறினார்கள்.
பதிலே வேண்டாம்.. ரெட் கார்டு தான்
கமல் எல்லோரின் குற்றச்சாட்டுகளை கேட்டுவிட்டு அதன் பின் பிரதீப்பின் விளக்கம் என்ன என கேட்டார். அப்போது பேசிய பிரதீப் மற்றவர்கள் பாத்ரூமில் அசிங்கம் செய்துவிட்டு வந்துவிடுகிறார்கள், அதை நான் சரி செய்திருக்கிறேன் என கூறுகிறார்.
அப்போது மணி எழுந்து ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். பிரதீப் பாத்ரூமை மூடாமல் சிறுநீர் கழிக்கிறார், அப்படி தான் செய்வேன் என பதில் வேறு சொல்கிறார் என கூறினார் மணி.
இந்த குற்றச்சாட்டை கேட்டபிறகு கமல் பிரதீப் விளக்கமே கொடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டு பிரேக் அறிவிக்கிறார்.
பிரதீப்புக்கு கமல் நோஸ்கட் கொடுத்து உட்கார வைத்தது மற்ற போட்டியாளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. அதற்கு பிறகு கமல் நேராக ரெட் கார்டு கொடுக்கும் வாக்கெடுப்புக்கு சென்றுவிட்டார்
பெரும்பாலானவர்கள் ரெட் கார்டு கொடுக்கலாம் என சொன்னதால் பிரதீப்பை நேராக கன்பெக்ஷன் ரூமில் இருந்து வெளியேற்றிவிட்டார் கமல்.